Pages

Saturday, July 31, 2010




இங்கே தெரியாமல்
கூட சிரித்துவிட கூடாது நான்...
அங்கே நீ அழநேர்ந்தால்....

ஹைக்கூ.......




நான் எழுதுவது எதுவும்
ஹைக்கூகள் இல்லை ....
உன்னை பற்றிய
ஐக்யூக்கள்....

Tuesday, July 27, 2010

பெண்......




ஆண்கள் தான் அழகு...
இது மனித இனத்துக்கு அல்ல...
இங்கே பெண்கள் தான் கொள்ளை அழகு...
எங்களை கொல்லும் அழகு....

அச்சம்




அறியாமல் தொற்றிகொண்டது அச்சம்...
நீ இன்று என்னை
முறைத்து பார்க்கவே இல்லை...
என்ன தவறு செய்தேனோ??
புரியவில்லையே.. ...

Monday, July 26, 2010




நாளைக்கே அழிந்து விடும் உலகம்...
என்ற பயத்தில் தான்...
இன்றே காதலிக்கிறேன் உன்னை....
என்னால் முடிந்த வரை....

கனவு...




இது கனவு... இது கனவு என்று...
கனவில் வரும் கனவைப்போல்...
விடிந்தால் மாறக்கூடாதா...
இந்த நொடியும் உன் நினைவும்...

அனுமதி...




அனுமதி கேட்டுத்தான் இயங்குகிறது...
என் சிந்தனையும் செயலும்..
என்னிடம் இல்லை.. அது உன்னிடம்....

நினைவு .......




நிஜத்தில் நடந்ததை நினைக்கிறேன்....
நினைவால் நடப்பதை மறக்கிறேன்....
நிஜத்தில் நீ இல்லை...
நினைவில் நீ இல்லாமல் எதுவும் இல்லை....

கடிதம் .....





பட படக்கும் பதட்டம்...
நகம் கடிக்கும் வெட்கம்...
திணறும் வார்த்தைகள்...
திண்டாட்டமான தருணங்கள்...
கிடைக்காமல் தான் போனது....
குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் தூது போகும்...
இன்றைய கணினி காதலர்களுக்கு...

நாம்...





நான், நீ என்று சொன்னால்
உதடுகள் ஒட்டாது....
நாம் என்று சொன்னால்தான் பெண்ணே..
அந்த வார்த்தைகளை சொல்ல...
என் உடம்பில் உயிர்கூட ஒட்டும்....

தேவதை......




எதுகை மோனை இல்லை....
இலக்கன தமிழ் இல்லை...
சிந்திக்க கருத்து எதுவும் இல்லை...
உன் அன்றாட நடவடிக்கைதான் எழுதுகிறேன்...
அழகான கவிதை என்கிறார்கள்..
இப்போ புரியுதா???...
எது கவிதை???... யார் தேவதை???...

பேருந்து பயணம்...



என் இடது தோள்பட்டையில்
உன் வலகன்னம்...
உன் இடகன்னதின் மேல்
என் இடகன்னம்....
ஒரு மணிநேரத்தில் முடியபோகும்
இந்த பேருந்து பயணத்தில்...
எதேற்சையாய் வரும் இந்த
குட்டி தூக்கத்திற்கு தான்...
எத்தனை அர்த்தங்கள்....

பயம்




இரண்டு கவிஞர்கள் காதலித்து கொண்டால்...
என்ன சொல்லி கொஞ்சிகொல்வார்கள்???...
எத்தனையாவது குழந்தைக்கு கண்ணதாசன்
என்று பெயர் வைப்பார்கள்...
அட!!! யாருக்குத்தான் பயந்து
கொள்வார்கள் இந்த உலகில்??? ...

தமிழ்




உனக்கு கவிதை எழுதுவது...
ஆங்கிலத்தில் தமிழ் என்று
எழுதியதை போல் ஆகும் ...

மரியாதை




சண்டை வந்தால்
மரியாதையாக பேசுவோம்...
சேர்ந்துகொண்டால் கெட்டவார்த்தை
சொல்லி கொஞ்சுவோம்....
புரிந்துகொள்ளவே முடியவில்லை...
இந்த காதல் கடவுளா??? சாத்தானா???...

காதல்......




இந்தப்பக்கம் ஒரு ரோடு இருக்கு...
அந்த ரோடுக்கு பக்கத்துல
ஒரு கிணறு இருக்கு...
அந்த கிணறு நிறைய
தண்ணீர் இருக்கு...
அந்த தண்ணியில் விழுந்தா
நமக்கு சாவு இருக்கு....
இது அத்தனையும் தெரிந்தும்
கண் திறந்து கொண்டே போய்
விழுவது தான் காதல்......

தூக்கம்




பகல் கனவுதான் பலிக்குமாம்...
பனிரெண்டு மணிக்குமேல் தான்
உறங்க செல்கிறேன்...
நம் திருமணத்தையும்,
குழந்தைகளையும் பார்க்க...

விரதம் ...




வேண்டுதல் இல்லை...
நேர்த்திகடன் இல்லை...
விரதம் மட்டும் தினமும்...
கடவுளால் அல்ல இந்த
காதல் சாத்தானால்.....

தூக்கம்




பகலில் நடப்பவைகள் அனைத்தையும்....
கனவில் கண்டதாக கூறுகிறேன் ...
தினமும் இரவில் கனவில் உன்னிடம்...

துரோகி...




எதிரிக்கும் துரோகிக்கும்
வித்தியாசம் சொல்கிறேன் கேள்...
காதல் பார்வை பார்த்து
ஆசை வார்த்தை பேசி....
காதலை சொல்ல வைத்து
அதை மறுத்த உன் மனம் எதிரி...
இது தெரிந்தும் இன்னும்
உன் பின் சுற்றும் என் மனம் துரோகி...

அடக்கம்.. ..




அடக்கம்..
நீ பெண் என்பதால்
செயலில் காட்டுகிறாய்...
நான் ஆண் என்பதால்
காதலில் காட்டுகிறேன்..

மதிப்பு





பெண்களுக்கு மதிப்பு
அலட்டிக்கொள்வது...
ஆண்களுக்கு மதிப்பு
அதை ரசித்தேகொல்வது ...

பிரிவு .......




அரைபரீட்சை லீவு முடிந்து...
அடுத்த நாள் பள்ளிக்கு போகும்...
அந்த ஆறாவது படிக்கும்
மாணவனின் மனநிலைதான்...
நாளைக்கு பாக்கலாம் என்று
சொல்லிவிட்டு வீடு திரும்பும் எனக்கு...



இதுக்குமேல என் பின்னாலே வந்தனா
போலீஸ் க்கு சொல்லிடுவேன்னு சொன்ன.....
அய்யோ போலீஸ் எல்லாம் எதுக்குங்க வேண்டாம்
நான் இனிமேல் உங்க பின்னாடி வரமாட்டேன்னு சொன்னேன்....
அதுக்கு "நீ என்ன பயந்தாங்கோளியாடானு" கேக்குற.....
இப்போ சொல்லு...
உன் பின்னாடி வரனுமா??? வரக்குடாதா???...



நன்கு பழக்கப்பட்ட...
பத்து மெலோடி பாடல்கள்...
ஐந்து சோகப்பாடல்கள்...
மூன்று சந்தோசபாடல்கள்...
ஒரு தாலாட்டுப்பாடல்....
ஒருசேர கேட்கிறது...
ஒவ்வொரு முறையும்
உன்னை பார்க்கும்போது...

வாழ்த்துக்கள்...




உன் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்...
உனக்கல்ல அது எனக்கு...
நீ எனக்காக பிறந்ததால்....

விரிசல்...



உனக்கு திருமணம் ஆகிடுச்சாம்...
கணவனுடன் வெளியூரில் இருக்கியாம்...
ஏதேதோ சொல்கிறார்கள்...
தினமும் பார்த்து கொள்வதில்லை...
என்பதை தவிர எந்த விரிசலும்
இல்லை என் காதலில்...



அமாவசை, மூன்றாம் பிறை,
பௌர்ணமிக்கெல்லாம் அர்த்தம் புரியுது....
உன்னை பார்க்கமுடியாத, சரியாக பார்க்கமுடியாத,
கூடவே இருந்த நாட்களில்...



உன்னை பார்க்க முடியாத நேரங்கள்...
நான் படிக்க தவறிய...
கவிதை தொகுப்புகள்...



பொறுத்திருந்து பொருந்திபோகத்தான் செய்கிறது....
என் கவிதையில் என்ன அழகான
வார்த்தை போட்டாலும்...
ஏதாவது ஒரு சூழ்நிலையில்...
உன் ஏதாவதொரு அசைவினில்... .



இன்று நான் நொடிக்கு நொடி அனுபவிக்கும்
நரக வேதனைக்கு....
அன்று உன்னுடன் ரசிக்க ரசிக்க கழித்த நாட்களே
ஆதாரம்....



திருவுக்கு பின்னால்
வரும் என் பெயரைவிட...
திருமதி உன்பெயருக்கு
பின்னால் வரும்
என் பெயர் தானடி அழகு...



ஜாதி, மத பிரச்சனை இல்லை...
உன் பதில் என்னவாய் இருக்கும்
என்று அவசியம் இல்லை...
மனதால் வாழ்ந்து கொண்டிருக்கும் இதயத்துக்கு
இந்த சாதாரண மனித வாழ்க்கை தேவை இல்லை...

திமிரு.....




உன் திமிரும் கோபமும் தான்...
என் கஞ்சியும், கூழும்...

எதிரி...




நீ எதிரில் வந்ததால்...
எதிரியாகி போனது...
என் மனசு....



வரைமுறையுடன் தான் பழகுகிறோம்...
வரம்பு மீற சொல்கிறதே...
உன் அழகு தீயும்...
என் ஆசை பேயும்...



பேச்சுவாக்கில் உங்கள் மனசை தொட்டு
சொல்லுங்கள் என்கிறார்கள்...
தொட்டு பார்க்க தேடினேன் காணவில்லையே!!!....

உன் ஆட்சி.....




என் மனசாட்சி...
அங்கே மட்டும் என்ன..
உன் சர்வாதிகார அராஜக
ஆட்சி தான் நடக்கிறது....

பாராட்டு விழா????..



உன் வயதென்ன சொல்...
கணக்கு போட வேண்டும்...
அங்கே பிரம்மனுக்கு
எத்தனையாவது பாராட்டு விழா????..

விருப்பம்...




பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேணும்னு கேட்ட...
உன் விருப்பம்னு சொன்னேன் வாங்கி தந்த....
கல்யாணத்துக்கு என்ன பரிசு வேணும்னு கேக்குற...
நீ விருப்பம்னு சொன்னேன் இன்னும் பதில் வரல????

நீயே சாட்சி......




நீயே சாட்சி என்பதால் தான்...
உண்மை என தெரிந்தும்
இன்னும் நிரூபிக்க முடியவில்லை....
உனக்கும் என் மேல் காதல் உண்டு என்பதை...



எனக்கும் என் காதலுக்கும் பிறந்த....
என் கவிதை இப்போது அனாதையாய் சுற்றுகிறது...
நாம் பார்த்துக்கொண்ட இடங்களிலும்.....
பேசிகொண்ட வார்த்தைகளிலும்....



என் கவிதை தான்
இந்த உலகிலேயே மிக அழகிய படைப்பு
என்று ஒரு மலை உச்சி மேல்
ஏறி உரக்க சொன்னேன்...
இல்லை என்று பலத்த சத்தம் கேட்டது...
அதிர்ச்சியில் திறம்பி பார்த்தேன்...
இறுகிய முகத்துடன்....
இறுமாப்புடன் நின்று கொண்டிருந்தான்
உன் தந்தை...



எதேச்சையாய் பத்து நொடி பார்த்தாலே
பசங்க பத்து நாள் பின்னாடியே சுத்துற
இந்த காலத்துல.....
உன்னையே வச்ச கண்ணு
வாங்காம பாக்கறேன்....

நேத்தைக்கு நீ போட்ட
சட்டை கலர்ல இன்னைக்கு
நான் சுடிதார் போடுறேன்....

உன் காதுல விழணும்னு
நாலு பேரு முன்னாடி
சத்தாமா என்னோட
செல் நம்பர் சொல்லுறேன்...

என்ன மன்னிச்சுடுடா...
பசங்கதான் முதல்ல சொல்லனும்னு
இந்த முட்டாள் சமுதாயம் சொல்லி வச்சிருக்கு....



பெண் என்பதால்...
ஊருக்கு பயந்து
பகிரங்கமாக உரக்க சொல்கிறேன்
என் காதலை....
தினமும் இரவில்....
என் தலையணைக்கடியில்
காத்து கிடக்கும் உன் புகைபடத்திடம்....



காற்றுக்கு ஒலி தந்த புல்லாங்குழலும்.....
பூ என்ற பெயரில் என்னை
இழுத்து சூடிகொண்ட உன் கார்குழலும்...
என்றுமே இந்த உலகின் புனிதமடி....



எப்போ கேட்பது...
எங்கே ஆரம்பிப்பது...
என்ன சொல்லி முடிப்பது....
ஆம் என்ற பதிலுக்காக மட்டுமே
என் உயிர் வாழும்...
என்னை உனக்கு பிடிச்சுருக்கா???
என்ற அந்த ஒரு கேள்வியை....



வள்ளுவன் இன்று
உன்னை கண்டால் துள்ளுவான்...
ஒரு ஹைக்கூ எழுதிபார்க்க....



விடிய விடிய கனவு....
அதில் ஒரு நொடி கூட
நீ இல்லை...
என்னை பிரிந்து....



கைதாகும்போது சிரிக்கிறேன்...
தண்டனை பெறும்போது ரசிக்கிறேன்...
இந்த உலகம் எனக்கு வைத்தபெயர்...
காதல் கைதி....