
எதேச்சையாய் பத்து நொடி பார்த்தாலே
பசங்க பத்து நாள் பின்னாடியே சுத்துற
இந்த காலத்துல.....
உன்னையே வச்ச கண்ணு
வாங்காம பாக்கறேன்....
நேத்தைக்கு நீ போட்ட
சட்டை கலர்ல இன்னைக்கு
நான் சுடிதார் போடுறேன்....
உன் காதுல விழணும்னு
நாலு பேரு முன்னாடி
சத்தாமா என்னோட
செல் நம்பர் சொல்லுறேன்...
என்ன மன்னிச்சுடுடா...
பசங்கதான் முதல்ல சொல்லனும்னு
இந்த முட்டாள் சமுதாயம் சொல்லி வச்சிருக்கு....
No comments:
Post a Comment